இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி

இறுதி போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணி

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இருதிபொதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 9) துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் நியூஸிலாந்து அணி மோதவுள்ளது.

நேற்றைய இரண்டாவது அரை இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்தது

அதற்கமைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

தொடர்ந்த போட்டியில் வில் யங் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தார்

இதையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ரவீந்திராவுடன், அனுபவ ஆட்டக்காரரான கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது

ரச்சின் ரவீந்திரா 101 பந்துகளில் 13 பவுண்டரிகள் , ஒரு சிக்ஸரும் அடங்கலாக 108 ஓட்டங்களை பதிவுசெய்தார்

மறுமுனையில் கேன் வில்லியம்சன் 94 பந்துகளில் 10 பவுண்டரிகள் இரண்டு சிக்ஸரும் அடங்கலாக 102 ஓட்டங்களை பதிவுசெய்தார்.

தொடர்ந்து மிட்செல் 49 ஓட்டங்கள் , ஃபிலிப்ஸ் 49 ஓட்டங்கள் என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்ய, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ஓட்டங்களை பதிவுசெய்தது

பந்துவீச்சில் தென்னாபிரிக்கா அணி சார்பில் லுங்கி நிகிடி 3விக்கெட்டுகளையும் , ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 363 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ரியான் ரிக்கல்டன் மற்றும் அணித்தலைவர் பவுமா களமிறங்கினர்.

ரியான் ரிக்கல்டன் 17 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க
ராஸி வான்டர் டூசன் களமிறங்கினர்

அணித்தலைவர் பவுமா மற்றும் ராஸி வான்டர் டூசன் ஜோடி சிறைப்பட விளையாடி 105 ஓட்டங்களை பதிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த விக்கெட் இழப்புகள் போட்டியின் திருப்புமுனை தருணமாக அமைந்தது.

இவர்களது ஆட்டமிழப்பை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் மிகவும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் தென்னாபிரிக்க அணி சார்பில் கடைசி வரை தனிநபராக போராடிய டேவிட் மில்லர் 67 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

50 ஓவர்கள் முடிவில் தென்னாபிரிக்கா அணி 312 ஓட்டங்களை பெற்றது.

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓட்டங்கள் வித்தியாசத்தி வெற்றிப் பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)