வைரலாகும் எலான் மஸ்கின் முடி அலங்காரம்

வைரலாகும் எலான் மஸ்கின் முடி அலங்காரம்

உலக பணக்காரர்களில் ஒருவரான, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தற்போது ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக குழுவிலும் பதவி வகிக்கிறார்.

அவரது தனித்துவமான முடி அலங்காரம் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.

தலையின் பக்கவாட்டு பகுதிகள் மற்றும் கீழ்பகுதியை முற்றிலும் மொட்டையடித்து, உச்சியில் மட்டும் முடியை வைத்து உள்ளார்.

இது ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் சிகையலங்காரம் போல தோற்றமளித்ததாக வலைத்தளவாசிகள் கருத்து பதிவிட்டனர். சிலர் அது வடகொரிய ஜனாதிபதி கிம் தோற்றத்தில் இருப்பதாகவும் கூறினர்.

ஆனால் இந்த சிகை அலங்கார புகைப்படங்கள் இப்போது எடுக்கப்பட்டவை அல்ல. 2021-ல் ஒரு கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் மியாமி நகருக்கு சென்றபோது எடுக்கபட்ட படங்களாகும். அந்தப்படம் பிரபல சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதால், பலரும் அது எலான் மஸ்கின் புதிய தோற்றம் என நினைத்து மீண்டும் கருத்திட்டு வைரலாக்கினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)