பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

பாசிக்குடாவில் விபசார விடுதி முற்றுகை – மூவர் கைது

மட்டக்களப்பு பாசிக்குடாவில் சட்டவிரேத விபசார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு முகாமையாளர் உட்பட மூவரை நேற்று (07) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹோட்டல் என்ற போர்வையில் விபசார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிசார் குறித்த விபசார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து அனுமதியை பெற்ற பின்னர் குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.

இதன் போது அங்கு முகாமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)