
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று!
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
வவுனியாவில் இன்று முற்பகல் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் இதன்போது விசேட அவதானம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவது தொடர்பில், கடந்த மத்திய குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் இன்று அவதானம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.