
வானிலை முன்னறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை மார்ச் 10ஆம், 11ஆம் திகதிகளில் தற்காலிகமாக மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CATEGORIES Sri Lanka