
ரமலான் மாதத்தின் இறுதியில் என்ன நடக்கும்?
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முடிவு ‘ஈத் அல்-பித்ர்’ (ஈகைத் திருநாள்) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாத்தின் முக்கியமான மத விடுமுறையான இந்நாளை, இஸ்லாமிய குடும்பங்கள் விருந்து நடத்திக் கொண்டாடுகின்றன. ஈத் அல்-பித்ர் பண்டிகை பத்தாவது மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் வருகிறது.
வானில் பிறை (சந்திரனின் முதல் பிறை) தென்படுவதைப் பொறுத்து, இந்த நாள் முடிவு செய்யப்படுகிறது. ஈத் பண்டிகையின் தேதி உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. பொதுவாக அவை ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வரை வேறுபடலாம்.
ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகைகள் அதிகாலை முதலே நடத்தப்படும், இந்த தொழுகைக்கான நேரமும் மாறுபடும். புத்தாடைகள் அணிந்து மசூதிகளில், திடல்களில் அல்லது மைதானங்களில் நடைபெறும் தொழுகையில் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள்.
CATEGORIES Sri Lanka