நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயுடன் இருவர் கைது

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயுடன் இருவர் கைது

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயை வைத்திருந்த இரு சந்தேக நபர்களை  சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவின் கண்டிபுரய பகுதியில், தரமற்ற தேங்காய் எண்ணெயை லொறியில் கொண்டு சென்ற போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 41 மற்றும் 51 வயதுடைய பன்னல மற்றும் சந்திவெளி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொது சுகாதார அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)