
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் புதிய அரசியல் கட்சி
முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அரசியல் கட்சியில், பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இணையவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்கள் செல்வாக்கை இழந்துள்ளதால் அதனை சீர்செய்ய நீண்டகாலம் தேவைப்படும் என்பதாலும் அரசியலில் ஈடுபட நிரந்தர தளம் ஒன்று தேவை என்பதாலும் இந்த புதிய அரசியல் கட்சியை உருவாக்க உத்தேசித்ததாக அந்த செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் முன்னாள் எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.