
வெலிக்கடை பொல்துவ சந்தியில் போராட்டங்களுக்கு தடை
வெலிக்கடை பொல்துவ சந்தியில் இன்று முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை சத்தியாக்கிரகம் மற்றும் போராட்டங்களைத் தடைசெய்ய நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குறிப்பிட்டுள்ள நாட்களில் வெலிக்கடை, பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிகளின்படி செய்யப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான இல. 04 நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் தம்மிக்க முனசிங்க,
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தென் மாகாண தலைவர் ரசிக பிரசாத்,
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மத்திய மாகாண தலைவர் சுமித் ரத்னாயக்க,
ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் மேல்மகாகாண செயற்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.எம்.எல்.ரங்வல உள்ளிட்ட ஏனைய பங்கேற்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் மற்றும் சத்தியாக்கிரகத்தின் போது, பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் வீதிகளைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் எந்தவொரு வீதிகளையும் மறிக்கவோ, போராட்டம் நடத்தவோ அல்லது வன்முறைச் செயல்களில் ஈடுபடவோ கூடாது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.