சுவஸ்திகா மீதான பாலியல் அவதூறு ; பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுவஸ்திகா மீதான பாலியல் அவதூறு ; பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

சபையில் பிரசன்னமாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் அவதூறான  சொற்களைப் பிரயோகிக்கும் பொழுது சபாநாயகர் அது தொடர்பான கட்டளையை விடுக்க முடியும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

புத்த சாசன அமைச்சு மீதான வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் ஆரம்பத்தில் சபை முதல்வர் என்ற அடிப்படையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சட்டத்தரணி சுவஸ்திகா மீது ஆபாச ரீதியில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. சபாநாயகர் இதுவிடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தேவையற்ற சொற்பதங்களை ஹன்ஸார்ட்டில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)