
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பில் சி.பி.ஐ வெளியிட்டுள்ள அறிக்கை
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து நான்கரை ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த விசாரணையின் இறுதி அறிக்கையை சி.பி.ஐ. வெளியிட்டுள்ளது.
இது குறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள இறுதி அறிக்கையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தவறானவை என்றும் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சி.பி.ஐ. தாக்கல் செய்திருக்கும் இறுதி அறிக்கையை தொடர்ந்து நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பது தொடர்பான இறுதி முடிவை எடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
CATEGORIES India