
புலம்புவதற்காக வேண்டி நாடு அநுரவிடம் வழங்கப்படவில்லை
சுப நேரத்தில் நாட்டை அநுரவுக்கு வழங்கிவிட்டு மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். வருமானம் அவ்வாறே இருக்கத்தக்க பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து மக்கள் கஷ்டப்பட்டு வாழ்கின்றனர்.
3 வேளை உணவு உண்பது சிரமமாகிப்போயுள்ள வேளையில், மக்களுக்கு அழுத்தம் கொடுப்பதில் இந்த அரசாங்கம் சிறந்து விளங்குகின்றது. இவற்றுக்கு மத்தியில் அரிசி, தேங்காய் போன்ற அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கும் போது அரசாங்கமும் ஆளுந்தரப்பு பிரதிநிதிகளும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் இன்றி மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் மருந்துப் பற்றாக்குறை பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகின்றன. மருந்தின்றி நோயாளர்களின் உயிரைக் காப்பாற்றுவது எவ்வாறு என்ற பிரச்சினை நிலவிவருகின்றன என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட வேட்பாளர்களுடன் நேற்று (26) இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மின்சக்தி அமைச்சரின் வீட்டின் அருகே உள்ள பல கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று இவ்வாறானதொரு நாடே காணப்படுகின்றது. நாட்டை ஆள்வதற்கான திட்டமில்லாத அரசாங்கமே ஆட்சியில் இருக்கிறது.
இதன் காரணமாக நாட்டின் திருப்புமுனையை தீர்மானிக்கும் விதமாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.