வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட நாட்களாகக் கருதப்படும் எனவும் இந்த நடவடிக்கைகள் ஏப்ரல் 29 ஆம் திகதி வரை தொடரும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஏப்ரல் 16 ஆம் திகதி உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்காக தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகள் ஏப்ரல் 7 ஆம் திகதி தபால் நிலையத்திற்கு வழங்கப்படவுள்ளதுடன் இந்நடவடிக்கைகள் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )