
நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சி கண்டு வருகிறது
நாடு முகம் கொடுத்து வரும் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் தீர்வுகளையும் பதில்களையும் வழங்க முடியாத, வினைத்திறன் அற்ற அரச நிர்வாகமே இருப்பதாக 220 இலட்சம் மக்களுக்கும் நாளுக்கு நாள் நன்கு புலப்பட்டு வருகிறது.
ஜனாதிபதியும் அமைச்சர்கள் தலைமையிலான ஆளுந்தரப்பு உறுப்பினர்களின் கூற்றுப்படி, யார் கூட குரல் எழுப்புகின்றனரோ, அவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும் என தெரிவித்து வருகின்றனர்.
சிறைக்கு செல்லும் பட்டியலை தயாரித்து வருகிறோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். கூச்சல் போடுமளவுக்கு சிறைக்கு செல்ல நேரிடும் என்றும், பாராளுமன்ற கூட்டத்தையும் சிறையில் நடத்த வேண்டி வரும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் நாட்டில் ஜனநாயகத்திற்கும், ஜனநாயக உரிமைகளுக்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது. மக்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல்வேறு கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைப்பதற்கு சுதந்திரம் இல்லை.
எமது நாடு ஜனநாயக நாடு என்பதை இந்த அரசாங்கம் மறந்து விட்டு செயல்பட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
விமர்சனம் செய்வதும், தவறுகளை திருத்துவதும், தவறுகளை சுட்டிக்காட்டுவதும், உண்மைகளை சுட்டிக் காட்டுவதும், தரவுகளை முன்வைப்பதும் சிறைக்குச் செல்ல ஒரு காரணமாக அமையும் என்பதனை சொல்லாமல் சொல்லுகின்றனர்.
இவை ஜனநாயக உரிமைகளாகும். இவற்றைக் கூறி ஆளுந்தரப்பு அமைச்சர்கள் அச்சுறுத்தி வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குண்டசாலை தேர்தல் தொகுதியில் நேற்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.