
வெடிபொருட்களுடன் ஒருவர் கைது
பொரளையில் சந்தேக நபர் ஒருவர் வெடிக்காத நிலையில் உள்ள வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த ,இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து ஒரு எல்.எம்.ஜி தோட்டா மற்றும் 7 ரி-56 வெடிக்காத நிலையில் உள்ள தோட்டாக்கள் மீட்கப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பத்தரமுல்லையில் வசிக்கும் 24 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Sri Lanka