சீரற்ற வானிலை ;  பனாமுர பகுதியில் கடும் பாதிப்பு

சீரற்ற வானிலை ; பனாமுர பகுதியில் கடும் பாதிப்பு

எம்பிலிப்பிட்டிய பனாமுர பகுதியில் இன்று (27) மாலை பெய்த கனமழை காரணமாக  பல பகுதிகளில் மண் மேடுகள் சரிந்துள்ளன. 

பனமுர பொலிஸ் பிரிவில் உள்ள கெம்பனே, ஓமல்பே, கொடவெல, தாபனே, தொரப்பனே ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன். 

தொரப்பனே வீதியின் இருபுறமும் கொடவெல மற்றும் கெம்பனே பகுதிகளில் மண் மேடுகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால்  அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

தொரப்பனேயிலிருந்து ஊருபொக்க செல்லும் வீதியும் கொடவெலகந்த மற்றும் கெம்பனே பகுதிகளில் தடைப்பட்டுள்ளது. 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )