
முச்சக்கரவண்டி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு
கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுகெலியாவ பகுதியில், சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாக முச்சக்கர வண்டி ஒன்று வீதியிலிருந்து விலகி, கொன்கிரீட் தூணில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி, ஒரு பெண் மற்றும் பின்புற இருக்கையில் பயணித்த இரண்டு ஆண்கள் அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அந்தப் பெண் உயிரிழந்தார்.
உபுல்தெனிய பகுதியைச் சேர்ந்த 43 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
CATEGORIES Sri Lanka