
HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் எச்.ஐ.வி. பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் பரவும் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
சமீப காலங்களில் நாட்டில் எச்.ஐ.வியுடன் வாழும் புதியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குறித்த திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், புதிய எச்.ஐ.வியுடன் வாழும் 824 பேர் பதிவாகியுள்ளனர். அவர்களில் 718 பேர் ஆண்கள் என கூறியுள்ளது.
சமீபத்திய காலங்களில் 15-24 வயதுக்குட்பட்டவர்களில் புதிய எச்.ஐ.வியுடன் வாழும் மக்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும், 15-24 வயதுக்குட்பட்டவர்களில் 115 பேர் புதிய எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், 2024ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட எய்ட்ஸ் இறப்புகளின் எண்ணிக்கை 47 ஆகும். 2023 ஆம் ஆண்டில், எய்ட்ஸ் இறப்புகள் 20% குறைக்கப்பட்டுள்ளன.
இது குறித்த கூடுதல் தகவல்களை www.aidscontrol.gov.lk இல் காணலாம்.