பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் தொடர்பாகக் கவனமாக இருங்கள்

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விபத்துகளைக் குறைப்பது தொடர்பாக நேற்று (03) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, விசேட வைத்தியர் இவ்வாறு தெரிவித்தார்.         

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில், விபத்துக்கள் காரணமாக அதிக நோயாளிகள் அரச மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.  ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 முதல் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில், ஒரு வாரத்திற்குள் விபத்துக்கள் காரணமாக சுமார் 28,000 – 30,000 நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.  பண்டிகைக் காலத்தில் அதிக வாகன விபத்துக்கள் ஏற்படுவதாகவும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 கீழே விழுதல், விலங்குகள் கடித்தல் மற்றும் தனிநபர்களுக்கிடையேயான தகராறுகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளும் உள்ளனர் என்றும், மற்ற நாட்களுடன் ஒப்பிடும்போது விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டினார்.எனவே, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் விழாக்களை அனுபவிக்கவும், முடிந்தவரை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் என்றும் விசேட  வைத்தியர்  வலியுறுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )