பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் (12), (13) மற்றும் (14) ஆகிய தினங்களில் அனைத்து கலால் அனுமதி பெற்ற மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று (03) நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட உரிமங்களுடன் ஹோட்டல்கள் மற்றும் சிறப்பு பூட்டிக் வில்லாக்களில் தங்கியிருக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே மது வழங்க முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS Wordpress (0) Disqus ( )