
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த லயனல் பிரேமசிறி
முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான லயனல் பிரேமசிறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசியலுக்குள் பிரவேசித்த இவர் காலி மேயராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மீண்டும் காலி மாவட்ட மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், கனடாவின் பிரதி உயர்ஸ்தானிகராகவும் சில காலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES Sri Lanka