அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா !

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா !

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றின் 11 ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

பியூஸ்ஜோர் கிரிக்கெட் மைதானத்தில் (Beausejour Stadium) நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொண்டது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பதிவு செய்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும் சிவம் துபே
28 ஓட்டங்களையும் பதிவு செய்தனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும்
மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தொடர்ந்து 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 76 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது .

அதற்கமைய எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் , தற்போது நடைபெற்றுவரும் ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்கள் என்பதை பொறுத்தே அவுஸ்திரேலியா அணியின் அரையிறுதி வாய்ப்பு தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)