செவ்வாய் பயணம் தள்ளிவைப்பு ; நிலவை அடுத்த இலக்காக அறிவித்த எலான் மஸ்க்

செவ்வாய் பயணம் தள்ளிவைப்பு ; நிலவை அடுத்த இலக்காக அறிவித்த எலான் மஸ்க்

நிலவை அடுத்த இலக்காக அறிவித்த எலான் மஸ்க்

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், பிரபல தொழிலதிபருமான எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்திற்கான தனது திட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனித குடியேற்றத்தை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நிலவையே அடுத்த முக்கிய இலக்காக நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளிக்கு சென்று மீண்டும் பூமிக்கு திரும்பக்கூடிய ஸ்டார்ஷிப் ரக விண்கலன்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றமான ராக்கெட் தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது.

அதே நேரத்தில், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிற்காக பால்கன், ராப்டர் உள்ளிட்ட ராக்கெட்களையும் தயாரித்து வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலன் ஒன்றை அனுப்ப எலான் மஸ்க் திட்டமிட்டிருந்தார். ஆனால், தற்போது அந்த முயற்சியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள அவர், “நிலவைவிட செவ்வாய் நமக்கு மிகவும் தூரமாக உள்ளது. எனவே தற்போதைய இலக்கை நிலவுக்கு மாற்றுகிறோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு விண்கலன் அனுப்பப்படும். தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளில் நிலவில் ஒரு தன்னிறைவு நகரத்தை உருவாக்கி மனிதர்களை குடியேறச் செய்வதே எங்களின் நோக்கம்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )