
பாதுகாக்கப்பட்ட பாம்புடன் நடனமடிய இளம்பெண்ணைக் கைது செய்ய உத்தரவு
கொழும்பு பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு இளவரசன் மற்றும் இளவரசி தெரிவுப் போட்டியின் போது, பாதுகாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பை கழுத்தில் சுற்றியபடி நடனமாடிய குற்றச்சாட்டில், நெத்மி ஹிரண்யா என்ற இளம்பெண்ணைக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி.ஜே. பிரேமரத்ன நேற்று (23) உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், மலைப்பாம்பு பாதுகாக்கப்பட்ட உயிரினமாகக் குறிப்பிடப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட விலங்கொன்றை முறையற்ற மற்றும் பாதிப்பு ஏற்படும் வகையில் கையாண்டது சட்டப்படி குற்றமாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெத்மி ஹிரண்யாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.
மேலும், நிகழ்வை ஏற்பாடு செய்த பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க விலிருந்து வாக்குமூலம் ஒன்றை நீதிமன்றம் பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

