
அனைத்து தடைகளும் நீக்கப்படும்வரை போர் தொடரும்
ஈரானின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடங்கிய போர் ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில், திடீர் திருப்பமாக 5 நாள் சண்டை நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹார்முஸ் ஜலசந்தி 48 மணி நேரத்தில் திறக்காவிட்டால், அந்நாட்டின் மின் நிலையங்களை தாக்கி அழிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் இதை நிராகரித்து, தங்களது மின் நிலையங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் உள்ள மின் நிலையங்களையும் தாக்குவோம் என அறிவித்தது.
இதற்கிடையே, ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெறுவதால், ஈரானின் எரிசக்தி மற்றும் மின்நிலையங்கள் மீதான தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் ஈரான், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளது.
ஈரான் தனது மீதான அனைத்து தடைகளும் நீக்கப்படும்வரை போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவரின் ராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாயி கூறியதாவது:
போரில் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், மீதான தடைகள் நீக்கப்படும்வரை போர் தொடரும்.
ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாத சர்வதேச உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும்.
எங்களின் உள்கட்டமைப்பை தாக்கினால், இனி பதில் “கண்ணுக்கு தலை, கை, கால்” போன்ற தாக்குதலாக இருக்கும்; அமெரிக்கா முடங்கிவிடும்.
இந்த நடவடிக்கைகள் ஈரான் மக்கள், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி மற்றும் ஆயுதப்படைகளின் முடிவு என அவர் கூறியுள்ளார்.

