
ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் மீண்டும் தொடக்கம்
கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்துப் பொதுச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று (24) காலை 11.00 மணி முதல் அனைத்து சேவைகளும் மீண்டும் வழங்கப்படுகின்றன.
நேற்று (23) ஏற்பட்ட கோளாறு காரணமாக, பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாமல் இருந்த நிலையில், இன்று காலை முதல் பெருமளவிலான மக்கள் திணைக்கள வளாகத்தில் திரண்டிருந்தனர். அந்த நேரத்தில், ஒரு வித பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.

