
இன்று நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊவா, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டளவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.
CATEGORIES Sri Lanka

