
இன்று உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தல்
இன்று ஆரம்பமாகும் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 2362 பரீட்சை நிலையங்களில் இம்முறை உயர்தரப் பரீட்சைநடைபெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
246,521 பாடசாலை பரீட்சார்த்திகள் மற்றும் 94,004 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“உங்கள் அடையாளத்தை சரிபார்க்க, உங்கள் முகம் வெளிப்படுத்தப்பட வேண்டும். பரீட்சைக்கு தோற்றும் சந்தர்ப்பத்தில் , உங்கள் காதுகள் மறைக்கும் வகையில் ஆடையணிக் கூடாது .. ஏனெனில் தற்போது கிடைக்கும் தகவல் தொடர்பு சாதனங்களை ஒரு பரீட்சார்த்தி மோசடி நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் .
அத்தகைய மோசடியைத் தடுக்க இந்த விதிகள் அமுல்படுத்தப்படுகின்றன.”
“இன்னொரு முக்கிய விடயம் உள்ளது
. விடைக்குறிப்புகளை பல வண்ணங்களை பயன்படுத்தி எழுத வழங்கப்பட்டிருக்கும் தாள் கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நாங்கள் வழங்கும் விடைத்தாள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் .
எனவே, தங்கள் நேரத்தை நிர்வகித்து விடைகளை எழுத சரியான விடைத்தாளை பயன்படுத்த வேண்டும்.” என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

