மஹரகம பன்னிப்பிட்டியவில்                           ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடு கண்டுபிடிப்பு                        ஆறு பேர் கைது

மஹரகம பன்னிப்பிட்டியவில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யும் வீடு கண்டுபிடிப்பு ஆறு பேர் கைது

மஹரகம, பன்னிபிட்டியவில் ஐஸ் போதைப்பொருள் பொட்டலமிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட ஒரு வீட்டை நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது .

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது போதைப்பொருள் விநியோகஸ்தர் உட்பட ஆறு பேரைக் கைது செய்துள்ளனர் .

குறித்த வீட்டிலிருந்து சுமார் 500,000 ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், அவற்றை பொதியிட பயன்படுத்தப்படும் பல உபகரணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

15 கிராம் ஐஸ் போதைப்பொருள், பொதியிட பயன்படுத்தப்படும் ஒரு சீல் செய்யும் உபகரணம் , இரண்டு மின்னணு தராசுகள், ஐஸ் போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் பல்வேறு அளவிலான பல சிறிய அளவீட்டு சாதனங்கள், சிறிய செங்கற்கள் மற்றும் போதைப்பொருள் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 16,800 ரூபாய் பணம் ஆகியவையும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர் 22 வயது இளைஞர் எனவும் ஏனைய ஐந்து பேரும் குறித்த நபரிடம் போதைப்பொருள் வாங்க வீட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், “முழுநாடும் ஒன்றாக ” தேசிய நடவடிக்கையுடன் இணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

குறித்த பிரதான சந்தேகநபரான இளைஞர் பன்னிப்பிட்டியவில் 20,000 ரூபாய்க்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொழும்பில் உள்ள கிராண்ட்பாஸ் பகுதியில் இருந்து பெறப்பட்ட ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு பொதி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டமை தெரியவந்துள்ளது .

இந்த சந்தேக நபருக்கு ஐஸ் போதைப்பொருள் வழங்கும் பிரதான விநியோகஸ்தர் யார் என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )