
பிரபல சிங்கள பாடகர் ராஜு பண்டார காலமானார்
பிரபல சிங்கள பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ராஜு பண்டார
காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 65 வயது.
மா ஆதரே முழு லோவட்டத் வாடா , ரோச மல் குமாரி , மா ஆதிய முலா லோவத் வேட், கடுனெல்லாலி தேசே, ஹடா கீ போத்தே, , ரன் மலக், ரன் சீனு நாத உள்ளிட்ட பல பிரபல பாடல்களை பாடல்களை அவர் பாடியுள்ளார்.
இலங்கையின் புகழ்பெற்ற இசைக் குடும்பத்தைச் சேர்ந்த ராஜு பண்டார , பாடகர் சந்திர பண்டாரவின் மகனும், புகழ்பெற்ற இசைக்கலைஞர் மற்றும் கிதார் கலைஞர் மஹிந்த பண்டாரவின் சகோதரரும் ஆவார்.
மேலும் அவர் தனது இறுதி நாட்களில் ராகமயில் உள்ள இல்லத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவு இலங்கை இசைத் துறைக்கு பாரிய இழப்பாகும் .
CATEGORIES Sri Lanka

