முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டம் நிறைவு

தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துள்ளார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக, கல்வி அமைச்சின் முன்பாக ஆரம்பித்திருந்த இந்த சத்தியாகிரகத்தை, அரசாங்கத்தின் புதிய ஒத்திவைப்பு தீர்மானத்திற்குப் பிறகு அவர் நிறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, விமல் வீரவன்ச தன்னுடைய போராட்டத்தை கைவிட்டுள்ளதுடன், கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான அரசின் முடிவை மதிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )