மொனராகலையில் இன்று காலை பஸ் விபத்து                                                                       ஒருவர் உயிரிழப்பு 22 பேர் காயம்

மொனராகலையில் இன்று காலை பஸ் விபத்து ஒருவர் உயிரிழப்பு 22 பேர் காயம்

மொனராகலை வெலியாய பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பஸ் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகவும், 22 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஒன்றும் , சுற்றுலா சென்ற தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது .

32 வயதுடைய தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த, இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஓட்டுநர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

பஸ் விபத்தில் காயமடைந்தவர்கள் மொனராகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )