மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் பலி

மொரகஹஹேன – மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பதற்காக வீட்டின் முன் பொருத்தப்பட்ட ஹோல்டரிலிருந்து மின்குமிழுக்கு மின்சாரம் பெற முயன்றபோது, ​​குறித்த சிறுமியின் மீது மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சிறுமி மீட்கப்பட்டு பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மில்லேவ, தம்மானந்த மாவத்தையில் வசித்து வந்த ஒன்பது வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )