
பிரதேச மற்றும் நாகர சபைகளுக்கு ஊழலற்ற மக்கள் பிரதிநிதிகள் அவசியம்
அரச அதிகாரிகள் பலர் ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எதிர்வரும் தேர்தலின் ஊடாக பிரதேச மற்றும் நாகர சபைகளுக்கு மீண்டும் பழைய ஊழல்வாதிகள் வருவதற்கு முயற்சிக்கின்றனர் என விவசாயம், இயற்கை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் . கே.டி. லால் காந்த தெரிவித்தார்
வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை பிரதேச மற்றும் நகர சபைகளினூடாகவே அந்ததந்த பிரதேசங்களுக்கு வழங்கப்படுகின்றது
இந்த நிதி சுரண்டப்படாமல் உரிய முறையில் பயன்படுத்தபட்டு மக்களை சென்றடைய வேண்டுமாயின் பிரதேச மற்றும் நகர சபைகளுக்கு திசைகாட்டியின் ஊழற்ற பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் . கே.டி. லால் காந்த தெரிவித்தார்
தற்போதைய அரசாங்கத்தில் மிகக் குறைந்த அளவில் அமைச்சர்கள் இருக்கும் நிலையில் , இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலின் ஊடாக அந்தந்த பிரதேசங்களுக்கு பொருத்தமான பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகுமென அமைச்சர் தெரிவித்தார்
கண்டியின் உடுநுவர தேர்தல் தொகுதி பூவெலிகெட்ட பகுதியில் அமைச்சர் . கே.டி. லால் காந்தாவின் தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றபோதே விவசாயம், இயற்கை வளங்கள், காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் . கே.டி. லால் காந்த இவ்வாறு தெரிவித்தார்

