பாதாள உலக உறுப்பினர்களான சூட்டி மல்லி, புஞ்சா உட்பட தேடப்பட்டு வந்த பெண்ணும் துபாயில் கைது

பாதாள உலக உறுப்பினர்களான சூட்டி மல்லி, புஞ்சா உட்பட தேடப்பட்டு வந்த பெண்ணும் துபாயில் கைது

நாட்டில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இரண்டு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களும், பல மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கந்தானையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை திட்டமிட்ட குற்றவாளி ரஞ்சித் குமார என்ற கோண்டா ரஞ்சியின் முக்கிய உதவியாளரான சூட்டி மல்லி இந்தக் குழுவில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

எல்பிட்டியவில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய குற்றவாளி உரகத இந்திகவின் நெருங்கிய கூட்டாளியான புஞ்சா என்ற ரவின் சமிந்த வீரசிங்கவும் டுபாயில் கைதான குழுவில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அத்துடன் பல மோசடி வழக்குகளில் பொலிஸாரால் தேடப்படும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்,

இரண்டு பெண் பொலிஸ் அதிகாரிகள் உட்பட 6 அதிகாரிகள் இந்த சந்தேக நபர்களை அழைத்து வருவதற்காக துபாய் சென்றுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )