தேசிய இளைஞர் சமூகத்திற்காக தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கொள்கை குறித்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்

தேசிய இளைஞர் சமூகத்திற்காக தயாரிக்கப்பட்டு வரும் தேசிய கொள்கை குறித்து உங்கள் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்கவும்

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் ஐக்கிய நாடுகளின் உலக மக்கள் தொகை நிதியமும் இணைந்து, தேசிய இளைஞர் கொள்கைக்காக பொதுமக்களின் கருத்துகளையும், பரிந்துரைகளையும் பெற உள்ளதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தெரிவித்தார்.

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்க QR குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, 0771806878 என்ற வாட்ஸ்அப் இலக்கம் அல்லது National Youth Policy 2025 பேஸ்புக் பக்கம் அல்லது youthpolicy2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.

செயலாளர், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, இலக்கம். 09, பிலிப் குணவர்தன மாவத்தை, கொழும்பு 07 என்ற முகவரிக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து கருத்துகளையும் பரிந்துரைகளையும் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே, அமைச்சின் செயலாளர் அருண பண்டார, மற்றும் ஐக்கிய நாடுகள் உலக ஜனத்தொகை நிதியத்தின் உதவி இலங்கை பிரதிநிதி வைத்தியர் தயாநாத் ரணத்துங்க ஆகியோர் இந்த ஊடகக் கலந்துரையாடலில் பங்கு பற்றினார்கள்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )