சருமம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா ? அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க !

சருமம் தங்கம் போல் ஜொலிக்க வேண்டுமா ? அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க !

இயற்கையாக அழகாக வேண்டும் என எண்ணுபவர்கள் வீட்டிலுள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தை அழகாக்க முடியும்.

அந்த வகையில், அரிசி கழுவும் தண்ணீரில் அதிகளவான சத்துக்கள் உள்ளன.

இது சருமத்திலுள்ள சுருக்கங்கள், கோடுகள் போன்றவற்றை நீக்கி இயற்கையான பளபளப்பைக் கொடுக்கிறது.

அரிசி நீரில் காணப்படும் விட்டமின்கள், தாதுக்கள் சரும நிறத்தை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும் ஃபெருலிக் அமிலம், அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு எதிராக போரிடும்.

சருமத்தில் இருக்கும் தோல் அழற்சி, முகப்பருக்கள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து கறுப்பு திட்டுக்கள், வீக்கத்தையும் நீக்குகிறது.

மேலும் இதிலுள்ள அமினோ அமிலங்கள், விட்டமின்கள், தாதுக்கள் போன்றவை சரும துளைகளை குறைத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.

இயற்கையான டோனராக தொழிற்படும் அரிசி நீர், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கிறது.

அரிசி கழுவிய நீரை சருமத்தில் உபயோகப்படுத்தினால் எப்பொழுதும் இளமையாக இருக்க முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)