
மின்னல் தாக்கி இளம் பெண் உயிரிழப்பு
ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்வத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 26 வயதுடைய இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் கொக்வத்த, ஹபராதுவ பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மின்னல் தாக்கத்திற்குள்ளான இரு பெண்களும் அப்பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது மின்னல் தாக்கியதன் விளைவாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட இரு பெண்களும் உடனடியாக மீபே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஒருபெண் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
CATEGORIES Sri Lanka

