விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது கலந்தாய்வு இன்று

விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது கலந்தாய்வு இன்று

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொது கலந்தாய்வு இன்று (06) நடைபெறும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காலை 08.30 முதல் பிற்பகல் 03.00 மணி வரை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வாய்மொழிக் கருத்துகள் பெறப்படும் என்று அதன் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டின் 2 மற்றும் 3 ஆம் காலாண்டுகளுக்கு நேஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் (தனியார்) நிறுவனத்தால் முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொது கலந்தாய்வு கோர ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.

திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணங்கள் குறித்த முடிவு மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு முன்னதாகத் தெரிவித்திருந்தது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )