
கொழும்பு டேம் வீதியில் அமைந்துள்ள கட்டடத்தில் திடீர் தீ பரவல்
கொழும்பு டேம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இன்று திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் தீ பரவலுக்கான காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்புப் படையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

