சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று (10) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நீர்கொழும்பு – தலுபொத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேச குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 75 லீற்றர் அளவிலான (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் தலுபொத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில், சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 135 லீற்றர் (180 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் 180 லீற்றர் கோடா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கட்டுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )