
மீண்டும் தீவிரமடையும் எலிக்காய்ச்சல்
நாட்டில் எலிக்காய்ச்சல் மீண்டும் தீவிரமடைந்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் விசேட வைத்தியர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
இன்று (11) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் ”எலிக்காய்ச்சல் பெரும்பாலும் சேற்று நீரால் பரவுவதாகவும், தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை காலத்தில் சிறுவர்கள் பட்டம் விடுவதற்காக வயல் நிலங்களுக்கு செல்வதால் இந்நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
காய்ச்சல் ஐந்து அல்லது ஆறு நாட்கள் நீடித்தால், அது எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்க வேண்டும் , கண்களில் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம், வயிற்று வலி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவை இந்நோயின் முக்கிய அறிகுறிகளாகும்
எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை இருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், இந்நோய் சிறுநீரகத் தொற்றுக்கு வழிவகுக்கும் ஆபத்து உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

