
தங்கத்தின் விலை அதிகரிப்பு
நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை மேலும் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தற்போதைய சந்தை நிலவரப்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 395,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 363,400 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,425 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

