
கல்கிஸ்ஸையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு
கல்கிஸ்ஸை படோவிட்ட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், அவரது கழுத்துப் பகுதியில் சிறிய வெட்டுக்காயம் காணப்பட்டதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
54 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

