அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படுகிறதா ?

அடிக்கடி தண்ணீர் தாகம் ஏற்படுகிறதா ?

சிலருக்கு அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தாகம் உண்டாகும். ஒரு சிலருக்கு நடு இரவில் திடீரென நாக்கு வறட்சி ஏற்பட்டு, அவசரம் அவசரமாக எழுந்து சென்று தண்ணீர் குடிப்பார்கள்.

வாயிலுள்ள மூன்று ஜோடி முக்கிய, பெரிய எச்சில் சுரப்பிகள், போதிய அளவு எச்சிலை சுரக்காததால் இவ்வாறு நாக்கு வறண்டு, உதடுகள் உலர்ந்து போகும். போதிய அளவு எச்சில் சுரக்காததற்குப் பல காரணங்கள் உள்ளன.

1). உடலில் நீர்ச்சத்து குறைந்து போதல்

2). கதிர்வீச்சு, மருந்து ஆகியவற்றின் மூலம் முகம், கழுத்திலுள்ள புற்று நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள்

3). வைட்டமின் யு மற்றும் வைட்டமின் டீ2 சத்து குறைவாக இருப்பவர்கள்

4). ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள்

5). மனநோய் பாதிப்பு உள்ளவர்கள்

6). அடிக்கடி பதட்டத்துடனும், படபடப்புடனும் இருப்பவர்கள்

7). அதிக வியர்வை, அதிக வாந்தி, அதிக வயிற்றுப் போக்கு ஏற்பட்டவர்கள்.

இவர்களுக்கெல்லாம் உடலில் நீர்ச்சத்து குறைந்துபோய், வாய் வறண்டு போக வாய்ப்புண்டு.

நாக்கு காய்ந்து போவதை சரி செய்ய…

1). ஒரு நாள் முழுக்க தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

2). புளிப்பு மிட்டாய் போன்றவைகளை வாயில் போட்டு சப்பிக் கொண்டே இருக்கலாம்.

3). மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

4). சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும்

5). அதிக இனிப்புள்ள பானங்கள் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

6). காபி, டீ குறைக்க வேண்டும்

7). புகையிலைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

8). நடு இரவில் நா வறட்சி, கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று. உதடு ஒட்டிக் கொள்ளும். வாய் திறக்க முடியாது, நாக்கு புரளாது, பேச்சு சரியாக வராது. இதனாலேயே பயம் வந்துவிடும். இவர்கள், படுக்கைக்கு அருகில் எப்பொழுதும் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். உடல் சீராக இயங்க, ஆரோக்கியமாக இருக்க, நீர்ச்சத்து உடலில் எப்பொழுதும் போதிய அளவு இருக்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )