
கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
சர்வதேச வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.44 டாலர் (1.32%) உயர்ந்து, 110.70 டாலர் என்ற அளவை எட்டியுள்ளது.
மே 5-ஆம் தேதியிலிருந்து பதிவான மிக உயர்ந்த விலை இதுவாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலையும் கணிசமான உயர்வைக் கண்டுள்ளது. அது ஒரு பேரலுக்கு 1.84 டாலர் (1.75%) அதிகரித்து, 107.26 டாலராக வர்த்தகமானது. இது மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான அதி உயர்ந்த மதிப்பு ஆகும்.
சர்வதேச சந்தையில் கேள்வி அதிகரிப்பு, வழங்கல் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

