புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது

peoplenews lka

 புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியானது

கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம்,  'புஷ்பா'. தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் நடிப்பில், பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதையடுத்து, இதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி உள்ளது.

இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று (08)  ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திர தோற்றத்தை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது. அதில் முதல் பாகத்தைக் காட்டிலும் சற்று வித்தியாசமான தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.

இதனையடுத்து, நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளான இன்று (08) ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் புஷ்பா 2 படத்தின் மிரட்டலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share on

சினிமா

peoplenews lka

நல்ல கதை அமைந்தால் சேர்ந்து நடிப்போம்...

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து.. Read More

peoplenews lka

“மேதகு” இசையமைப்பாளர் காலமானார்...

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார்.. Read More

peoplenews lka

“அந்த மாதிரி படங்களில் நடிப்பது என்னுடைய கடமை”...

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில்.. Read More

peoplenews lka

4 ஆண்டுகளுக்கு பிறகு காதலனை பிரிந்த ஸ்ருதிஹாசன்...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஸ்ருதிஹாசன். 7 ஆம் ஆறிவு, 3 ஆகிய படங்களில் நடித்து.. Read More