வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்க மறுத்த சஜித் !

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்க மறுத்த சஜித் !

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் இல்லாத நிலையில் ஜனநாயக முறையில் பொறுப்பேற்க வேண்டியவர் எதிர்க்கட்சித் தலைவர். ஆனால் அவர் அந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்த தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற பிராந்திய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர்,

‘நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது அதனை எதிர்க்கட்சித்தலைவர், ஜனநாயக அமைப்பிற்குள் பொறுப்பேற்றிருக்க வேண்டும்.

ஆனால் அன்று அந்தப் பொறுப்பை அவர் ஏற்கவில்லை. அடுத்ததாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்கு இது தொடர்பில் பொறுப்பு உண்டு.

அவர்களில் யாரும் இதனை ஏற்கவில்லை. இதனால் தான் அனுபவமிக்க மிகவும் மூத்த மற்றும் முதிர்ந்த தலைவர் அடுத்ததாக அழைக்கப்பட்டார்.

எந்தவித தயக்கமுமின்றி அந்தப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைநாட்டி மிகச்சிறப்பாக முன்னெடுத்துள்ளார் ‘ என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )