அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கை வருகிறார்

அமெரிக்க உதவிச் செயலாளர் டொனால்ட் லூ இலங்கை வருகிறார்

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைசெயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இலங்கைக்கு மேலதிகமாக, அவர் தனது ஆசிய சுற்றுப்பயணத்தில்
இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்த அவர் நேற்று (10) இந்தியா சென்றடைந்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சுற்றுப்பயணம் ஆசிய நாடுகளிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க ஆதரவை நிரூபிக்கும்.

இந்தியாவின் சென்னையில், தென்னிந்தியாவில் இருதரப்பு ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்காக துணை செயலாளர் தூதரக
அதிகாரிகளையும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைசெயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) சந்திக்கவுள்ளார்.

தொடர்ந்து தனது இந்திய விஜயத்தின் பின்னர் இலங்கைக்கு விஜயம்
செய்யும் இவர், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்துவதுடன், சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகத்தின் அடித்தளமான வலுவான சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணைசெயலாளர் டொனால்ட் லூ (Donald Lu) பங்காளதேஷ்
செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )