ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!

ரணிலுடன் இணைந்தார் தலதா அத்துகோரல!

அறுபத்தொன்பது இலட்சம் மக்கள் ஆணையைப்பெற்று ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய போது, ஆதரவற்ற மக்களுக்கு உதவிய ஒரே தலைவ ர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க மட்டுமே. அதனை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றியதன் காரணமாகவே, இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நீதி அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இன்று எனது அரசியல் வாழ்வில் மிக முக்கியமான நாள். மற்றும் மிகவும் மகிழ்ச்சியான நாள்.

இந்த முடிவை எடுப்பது பற்றி நீண்ட நாட்களாக யோசித்து வந்திருக்கிறேன்.

நான் நீண்ட காலம் நினைத்திருந்த விடயத்துக்கு நிவர்த்தி வழங்கும் வகையில் இன்று சரியான தீர்மானம் எடுத்துள்ளேன்.

அதனாலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்தேன். 20 வருடகால எனது அரசியல் வாழ்க்கையில், 16 வருடங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் செயற்பட்டுள்ளேன்.

மீதமான 04 வருடங்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கீழ் செயற்பட்டுள்ளேன்.

69 இலட்சம் மக்களின் வாக்குகளைப் பெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களை அந்தரத்தில் விட்டு விட்டு சென்றார் .

வரிசை யுகம் ஆரம்பிப்பதற்கு மக்கள்அத்தியாவசியப் பொருட்கள் இன்றி கஷ்டப்பட்டைமக்கும்அவேர காரணமாவார்.

அச் சந்தர்ப்பத்தில் நாட்டையும் நாட்டு மக்கைளயும் பாது காக்க, சிந்தித்து நாட்டை பொறுப்பேற்ற ஒர தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுேம.

அந்தப் பொறுப்பை அவர் நிறைவேற்றியுள்ளார்.

நாட்டின் எதிர்காலம்தொடர்பாக அவரிடம் பல்வேறு வேலைத்திட்டங்கள் உள்ளன.

அதனை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதிக்கு மக்கள் முழுமையான ஆதரைவ வழங்க வேண்டும் என அவர்தெரிவித்தார் .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )